நெறிமுறைகள் கடந்து
உன் குறி துளைக்க
விளையும் மனதின்
தூரம் குலைகிறது
இலக்கில் கவனம்
குவித்தால் பறவை
வீழும் என்ற உபதேசம்
அர்ஜுனனுக்கு மட்டுமா?
இங்கு நாண் ஏற்ற
அங்கு நீ நாணும் அலை
என்னை அடைகிறது
பறவையின் முனகலில்
தளர்ந்தது வில்
அறிவுரைக்க அருகில்
இல்லை ஒரு சாரதி !!!
Thursday, July 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment